
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய நிறுவனங்கள் சமீபத்தில் ரீசார்ஜ் கட்டணங்களை பல மடங்கு உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தன. இதற்கு போட்டியாக அரசுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் மலிவு விலை திட்டங்களை அறிவித்து வருகிறது.
இந்த நிலையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகையை மட்டும் எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு 199 ரூபாய், ரூ,219, ரூ.489, ரூ.509, ரூ.1,999 ஆகிய திட்டங்களை ஏர்டெல் நிறுவனம் வழங்குகிறது. இவை முறையே 28 நாட்கள் வேலிடிட்டி+ 2 ஜி பி டேட்டா, 30 நாட்கள் வேலிடிட்டி +3 ஜிபி டேட்டா, 77 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 6gb டேட்டா, 84 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 6gb டேட்டா, 365 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 24 gb டேட்டா வசதியை வழங்குகின்றது.