பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளியான பதான் மற்றும் ஜவான் ஆகிய திரைப்படங்கள் ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. அதன் பிறகு ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த டன்கி திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் ஷாருக்கானுக்கு பாலிவுட் மட்டுமின்றி இந்திய அளவில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். கடந்த வருடம் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் திரைப்படத்தை இயக்குனர் அட்லி இயக்கி இருந்த நிலையில் நடிகை நயன்தாரா ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் வழக்கமாக சமூக வலைதளங்களின் மூலம் ரசிகர்களுடன் உரையாடுவார். அந்த வகையில் சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் அவர் உரையாடும்போது ரசிகர் ஒருவர் ஜவான் படத்தில் நடிக்கும் போது உங்களுக்கு நயன்தாரா மீது காதல் ஏற்பட்டதா என்று கேட்டார். இதற்கு நடிகர் ஷாருக்கான் மிகவும் கோபமாக பதில் அளித்துள்ளார். அதில் வாயை மூடுங்க. தற்போது நயன்தாரா 2 குழந்தைகளுக்கு தாய் என்று கோபமாக பதிலளித்துள்ளார். நடிகர் ஷாருக்கானின் தாய்மையை போற்றும் இந்த பதில் பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது. மேலும் அந்த ரசிகரின் அநாகரிகமான கேள்விக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.