வாரத்திற்கு 70 மணி நேர வேலை செய்வது என்பது ஒருவருடைய மரணத்திற்கு வழிவகுக்கும் என்று ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றி வரும் பிரபல நரம்பியல் நிபுணர் சுதீர் குமார் என்பவர் எச்சரித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ஏற்கனவே வாரத்திற்கு 55 மணி நேரம் வேலை செய்பவர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு 35 சதவீதம் அதிகம் உள்ளது.

மேலும் இதய நோய் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் 17 சதவீதம் அதிகம் உள்ளது. வாரத்திற்கு 55 மணி நேர வேலையை வருடத்திற்கு சராசரியாக 8 லட்சம் பேரில் உயிரிழப்பிற்கு காரணமாக அமைகிறது. முதலாளிகள் தங்களின் சொத்து மதிப்பை அதிகரித்துக் கொள்ள ஊழியர்களை ஆபத்தில் தள்ளுவது ஏற்புடையது அல்ல என்று அவர் எச்சரித்துள்ளார்.