
பூந்தமல்லி அருகே வாரிவாகத்தில் ஒரு செங்கல் சூளை அமைந்துள்ளது. இந்த செங்கல் சூலையில் கொத்தடிமைகளாக வேலை பார்த்த ஒடிசாவை சேர்ந்த 13 குடும்பங்களைச் சேர்ந்த 43 பேரை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். வெளிமாநிலத்தில் இருந்து கொத்தடிமைகளாக வேலைக்கு அழைத்து வந்துள்ளனர்.
முதலில் 35 ஆயிரம் ரூபாய் சம்பளம் தருவதாக பேசி வாரம் 200 ரூபாய் மட்டுமே சம்பளமாக கொடுத்துள்ளனர். இதுகுறித்து வந்த புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று கொத்தடிமைகளாக வேலை பார்த்த 43 பேரை பத்திரமாக மீட்டனர்.