திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தெரசம்மாள் குடியிருப்பில் ஜேம்ஸ் பிரவீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். பிரவீன் வெல்டிங் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் பிரவீனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தோமையார் என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் வசிக்கும் ஒருவர் உயிரிழந்ததால் துக்கம் விசாரிப்பதற்காக பிரவீன் சென்றார். அதை வீட்டுக்கு தோமையாரும் சென்றுள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த தோமையார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரவீன் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் படுகாயமடைந்த பிரவீன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரவீனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தோமையாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.