உத்திர பிரதேசம் மாநிலத்தில் மருத்துவர் ஒருவர் தன்னுடைய மனைவியை கடந்த ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருடைய மனைவியும் மருத்துவர். இவர்கள் இருவரும் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இந்நிலையில் தன்னுடைய மனைவிக்கு வேறு நபர்களுடன் தொடர்பு இருப்பதாக அவருடைய கணவருக்கு சந்தேகம் எழுந்த நிலையில் இது குறித்து அவர் காதுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. உடனடியாக நேற்று முன்தினம் இரவு தன்னுடைய மனைவியை பின்தொடர்ந்து அவர் சென்றுள்ளார். அப்போது அவர் மனைவி காஸ்கஞ்ச் நகரத்தில் உள்ள ஒரு ஆடம்பர ஹோட்டலுக்குள் நுழைந்துள்ளார்.

பின்னர் நள்ளிரவு நேரத்தில் அவருடைய மனைவி தங்கி இருந்த அறைக்குள் அவர் தன்னுடைய 2 நண்பர்களுடன் நுழைந்துள்ளார். அப்போது அவருடைய மனைவியுடன் 2 ஆண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் மற்றும் அவருடைய நண்பர்கள் அவர்களுடன் தகறாறில் ஈடுபட்டதோடு தர்மஅடி கொடுத்தனர்.  இந்த சம்பவம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூகவலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் அந்தப் பெண்ணின் கணவர், அவருடைய இரு நண்பர்கள் மற்றும் பெண்ணின் ஆண் நண்பர்கள் இருவர் ஆகியோரை கைது செய்தனர். ஆனால் அந்த பெண்ணை மட்டும் அவர்கள் கைது செய்யவில்லை. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.