சென்னை கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகரை சேர்ந்த தர்மா என்ற இளைஞர் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு தன்னுடைய நண்பர்கள் கிஷோர் மற்றும் கோகுல் ஆகியோருடன் சேர்ந்து கொருக்குப்பேட்டை ரயில்வே கேட் அருகே அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார். அங்கு இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் வந்த நிலையில் கையில் இருந்த கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தர்மாவை சரமாரியாக வெட்டினர். சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிஷோர் மற்றும் கோகுல் இருவரும் கொலை கும்பலை தடுக்க முயன்ற நிலையில் அப்போது அவர்களையும் அந்த கும்பல் வெட்டி உள்ளது.

இதில் லேசான காயத்துடன் அவர்கள் உயிர்தப்பிய நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணையை தொடங்கினர். கொலையாளியான தர்மாவின் அண்ணன் சூர்யா அந்த பகுதியில் அடிதடி வழக்குகளில் ஏற்கனவே சிக்கி உள்ள நிலையில் முன்விரோதம் காரணமாக மர்ம கும்ப கும்பலை சூர்யா தீர்த்து கட்ட வந்துள்ளார். ஆனால் ஆள் மாறி அண்ணன் சூர்யாவுக்கு பதில் தம்பியான தர்மாவை வெட்டிக் கொன்றது விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கொலை கும்பலை போல போலீசார் தேடி வருகிறார்கள்.