சமூகவலைத்தளத்தில் குசும்புக்கார குரங்குகளின் வீடியோக்கள் அவ்வபோது வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி, தற்போது பகிரப்பட்டுள்ள வீடியோவில், மொட்டை மாடியின் ஓரத்தில் குரங்கு சோகமாக அமர்ந்திருப்பதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் அங்கு வந்த ஒரு நபர் தான் சாப்பிட்ட வாழைப்பழத்தை குரங்குக்கு கொடுக்க நினைக்கிறார்.

எனினும் அந்த குரங்கு வாழைப் பழத்தை எடுக்க மறுத்து விடுகிறது. மேலும் குரங்கு அந்நபரை எரிச்சலுடன் பார்க்க தொடங்குகிறது. அந்நபர் ஏதோ தவறு செய்ததை போன்று குரங்கு பார்க்கிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தங்களது கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.