ஹரியானா மாநிலத்தில் வசித்து வருபவர் விஜய் தாபா(20). இந்த வாலிபர் கடந்த சில மாதங்களாக பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பகுதியில் ஹோட்டலில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு செல் போன் மூலமாக வடபழனியில் உள்ள இளம் பெண் ஒருவரோடு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து வாலிபரை அந்தப் பெண் உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். அதன்படி வாலிபரும் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்துள்ளார். பின் இதற்காக பேசிய பணத்தைவிட கூடுதலாக கொடுக்கும்படி அந்த பெண் கேட்டதால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்பொழுது அந்த வீட்டின் மற்றொரு அறையில் பதுங்கி இருந்த திருநங்கை, இளம்பெண் உட்பட நான்கு பேர் பாட்டிலை உடைத்து அந்த வாலிபரை குத்தி கொலை செய்து விடுவதாக மிரட்டி 12 ஆயிரம் பணத்தை பறித்துவிட்டு மிரட்டி அனுப்பி உள்ளார்கள். அதன் பிறகு விஜய் தாபாவின் செல்போனை தொடர்பு கொண்ட அவர்கள் இளம் பெண்ணோடு உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி மிரட்டி பணம் கேட்டு அடிக்கடி மிரட்டி வந்துள்ளனர். இதனை அடுத்து அந்த வாலிபர் போலீசில் புகார் அளித்துள்ளார் .இதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பர்கானா, அஷ்விதா, முஸ்தபா என்ற திருநங்கை மற்றும் தினேஷ்குமார், பரத்குமார் ஆகிய நான்கு பேரை கைது செய்துள்ளனர்.