விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அனைத்தும் அமலுக்கு வந்துள்ளது. இந்த தொகுதியின் திமுக எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் வருகின்ற ஜூலை 10 இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து வேட்பு மனு தாக்கல் ஜூன் 21ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மூத்த குடிமக்கள் தபால் வாக்கு செலுத்த வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் போலீசாருக்கு தபால் வாக்கு செலுத்த வசதி ஏற்படுத்தி தரப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.