விக்கிரவாண்டி இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில் கூட்டணியில் இருக்கும் தேமுதிகவும் புறக்கணிப்பதாக தற்போது பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றைய ஆட்சியாளர்கள் கையில் தேர்தல் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது.

இடைத்தேர்தல் மீது நம்பிக்கை இல்லாததால் உழைப்பு, பணம், நேரம் போன்றவற்றை விரயம் செய்ய விரும்பவில்லை என்று கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் முக்கிய கட்சிகளாக இருக்கும் அதிமுக மற்றும் தேமுதிக ஆகியவைகள் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.