சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது த.செ. ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் முதல் சிங்கள் இன்று மாலை 5:00 மணிக்கு வெளியாகும் நிலையில் நேற்று  புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர். படத்திற்கு அனிருத் இசையமைக்கும் நிலையில், அமிதாப்பச்சன் மற்றும் மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்நிலையில் நேற்று  “மனசிலாயோ” பாடலின் ப்ரோமோ வீடியோ வெளியானது.

அதாவது லெஜன்ட் பாடகர் மலேசியா வாசுதேவனின் குரலை ஏஐ மூலமாக அனிருத் கொண்டு வந்துள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ம் தேதி மலேசியா வாசுதேவன் இறந்த நிலையில், கிட்டதட்ட 27 வருடங்களுக்குப் பிறகு மலேசியா வாசுதேவன் வேட்டையன் படத்தில் பாடியது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அவருடைய குரலை ஏஐ மூலமாக அனிருத் கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் தற்போது வேட்டையன் படத்தின் முதல் பாடலை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும் இந்த பாடல் ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது.