
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் புதிதாக அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்த நிலையில் கடந்த 27ஆம் தேதி முதல் மாநாட்டினை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். இந்த மாநாட்டில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அதன் பிறகு நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் கொள்கைகள் மற்றும் அரசியலுக்கு வந்ததற்கான காரணம் அரசியலில் எதிரி நண்பன் என பல்வேறு விஷயங்களை அறிவித்தார். குறிப்பாக பாஜகவை மறைமுகமாக விமர்சித்து அவர் திமுகவை நேரடியாகவே அரசியல் எதிரி என்று அறிவித்துவிட்டார்.
அதோடு ஆட்சி அதிகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கும் பங்கு என்ற அறிவித்துள்ளார். இந்நிலையில் இன்று தீபாவளி பண்டிகையில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். பின்னர் நடிகர் விஜயின் அரசியல் பயணம் குறித்து முதல் மாநாடு குறித்தும் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது நடிகர் விஜயின் முதல் மாநாடு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளதாகவும் நடிகர் விஜய்க்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்றும் ரஜினிகாந்த் கூறினார். மேலும் நடிகர் ரஜினிகாந்த் விஜயின் மாநாடு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளதாக கூறியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.