
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவின்போது திமுகவுக்கு எதிராகவும் விஜய்க்கு ஆதரவாகவும் பேசினார். அதன் பிறகு அவர் விசிக கட்சியிலிருந்து 6 மாதக்காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் இன்று அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து நிரந்தரமாக விலகுவதாக அறிவித்தார். அதே சமயத்தில் தன்னுடைய அரசியல் பயணம் தொடரும் என்றும் தன்னுடைய கருத்துகளால் திருமாவளவனுக்கும் தனக்கும் உள்ள உறவில் விரிசல் ஏற்படுவதை தான் விரும்பவில்லை எனவும் கனத்த இதயத்துடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் அவர் இணைய உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதற்காக அந்த கட்சியினருடன் ஆதவ் அர்ஜுனா தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் பட்சத்தில் அந்த கட்சியின் ஐ டி விங்க் முழுமையாக ஆதவ் அர்ஜுனா கைவசம் செல்லும் என்று கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இனிவரும் காலத்தில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.