தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சீமான் எப்போதும் ஒரே நிலைப்பாடுடன் இருக்க வேண்டும் என்று அவர் கூறினார். அதாவது விஜய் பற்றி சீமான் விமர்சனம் செய்தது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, சீமான் திடீரென அம்பியாக மாறுவார். திடீரென அந்நியனாக மாறுவார். முதலில் எதற்காக விஜயை தம்பி என்று கூறினார்.

பின்னர் ஏன் லாரியில் அடிபட்டு செத்து விடுவாய் என்று கூறவேண்டும். இது எல்லாத்தையும் அவர்தான் பதில் சொல்ல வேண்டும். பேச முடியும் என்பதற்காக வாய்க்கு வந்ததை பேசக்கூடாது என்று கூறினார். மேலும் முன்னதாக நடிகர் விஜயின் கொள்கைகள் அழுகிய கூமுட்டை என்றும் லாரியில் அடிபட்டு செத்து விடுவாய் என்றும் சீமான் விமர்சித்தார். அதோடு விஜய்யை தம்பி என்று கூறிய சீமான் ‌ நடிகர் விஜய்யை மிகவும் மோசமான வார்த்தைகளால் விமர்சித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது தேமுதிக கட்சி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.