
கடந்த 1986 ஆம் வருடம் வெளியான திரைப்படம் புன்னகை மன்னன். இந்த படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானவர்தான் ஷிஹான் ஹூசைனி. இவர் விஜய் நடிப்பில் வெளியான பத்ரி என்ற படத்திலும் நடித்திருந்தார் . அதன் பிறகு காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் மதுரையை சேர்ந்த பிரபல கராத்தே மாஸ்டர் ஆவார். இவர் 300-க்கும் மேற்பட்ட வில்வித்தை வீரர்களுக்கு பயிற்சி அளித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று உயிரிழந்துள்ளார் .
இந்த நிலையில் இவருடைய கடைசி ஆசை ஒன்று நிறைவேறாமல் போகி உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இவர் நடிகர் விஜய்யை சந்திக்க வேண்டும் என்று கூறியிருந்தாராம். அவரை சந்தித்து வில்வித்தையை தமிழகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுக்க இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக இன்று காலமானதால் அவருடைய கடைசி ஆசை நிறைவேறாமல் உயிர் பிரிந்துவிட்டது.