தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அவர் கட்சி தொடங்கி நேற்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு கட்சி அலுவலகத்தில் கொள்கை தலைவர்களின் சிலையை விஜய் திறந்து வைத்தார். இந்நிலையில் நடிகர் விஜய் பொதுவாக ரசிகர்களை சந்திக்கும் போது செல்பி எடுப்பது வழக்கம். அவர் மேடையில் இருந்தவாறு ரசிகர்கள் தெரியும்படி செல்பி எடுப்பார். இதேப் போன்று முதல் மாநாட்டின் போது கூட நடிகர் விஜய் செல்பி எடுத்தார். சமீபத்தில் அவருடைய கடைசி படமான ஜனநாயகன் போஸ்டர் வெளியான போது அதில் நடிகர் விஜய் செல்பி எடுப்பது போன்று தான் புகைப்படம் இருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற சாரண சாரணியர் இயக்கத்தில் வைர விழாவின் போது முதல்வர் ஸ்டாலின் செல்பி எடுத்தார்.

இந்த புகைப்படத்தை அவர் தன்னுடைய x பக்கத்தில் வெளியிட்ட நிலையில் தளபதி ஸ்டைலில் காப்பி அடித்து செல்பி எடுத்துள்ளதாக தற்போது அவருடைய ஆதரவாளர்கள் விமர்சித்து வருகிறார்கள். இது தொடர்பாக பல்வேறு பதிவுகளை நெட்டிசன்கள் வைரல் ஆக்கி வரும் நிலையில் ஒரு நெட்டிசன் வெளியிட்டுள்ள பதிவில் விஜயாக நினைத்தார், விஜயாக நின்றார், விஜயாகவே மாறிவிட்டார் என்று பதிவிட்டுள்ளார். இதேபோன்று மற்றொரு நெட்டிசன் வெளியிட்டுள்ள பதிவில் விஜய் போன்று செல்ஃபி எடுக்க முயற்சி செய்தும் அவருக்கு வரும் அளவுக்கு கூட்டம் தான் வரவில்லை என்று கலாய்த்து பதிவிட்டுள்ளார். அதன் பிறகு மற்றொரு பதிவில் எங்க தலைவரை காப்பி அடிக்கும் திமுக தலைவர் என்று பதிவிட்டுள்ளனர். மேலும் இது தொடர்பான பதிவுகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் திமுகவினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.