
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதிலிருந்து அவருக்கு ஆதரவு கொடுத்த நிலையில் தம்பி என்று கூறினார். ஆனால் விஜய்யின் முதல் மாநாடு மற்றும் செயற்குழு கூட்டம் முடிவடைந்த பிறகு அவருடைய கட்சி கொள்கைகளில் உடன்பாடு இல்லாத காரணத்தினால் விஜயை சரமாரியாக விமர்சிக்க ஆரம்பித்து விட்டார். சீமான் விஜயை விமர்சித்தாலும் விஜய் சீமானை விமர்சிக்கவில்லை. மாறாக தன் கட்சி நிர்வாகிகளிடமும் எதிர் தரப்பை தேர்ந்தவர்கள் எவ்வளவு தரம் தாழ்ந்து பேசினாலும் நாம் அதற்கு மல்லு கட்டிக்கொண்டு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று கூறினார். சமீபத்தில் கூட சீமான் அளித்த ஒரு பேட்டியின் போது ஜெயலலிதா மற்றும் கருணாநிதியை விட விஜய் என பெரிய தலைவரா என்ற கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான் விஜய் எப்போதும் போல என்னுடைய சகோதரன் தான். அன்பு மற்றும் பாசத்தில் துளி அளவு கூட குறை கிடையாது. அதே சமயத்தில் கட்சி கொள்கை மற்றும் கோட்பாடுகளில் தான் நிறைய முரண்பாடுகள் இருக்கிறது. அதன் பிறகு விஜய் மட்டும் தான் திமுகவை எதிர்க்கிறாரா இத்தனை ஆண்டுகள் ஆட்சியில் இருந்த திமுகவை நான் எதிர்க்கவில்லையா என்று கூறினார். மேலும் சமீபத்தில் சீமானுக்கு சகோதரர் என்று கூறி விஜய் பிறந்தநாள் வாழ்த்து கூறிய நிலையில் சீமானும் பதிலுக்கு தம்பி என்று கூறி நன்றி தெரிவித்திருந்தார். அதன் பிறகு கூட விஜயை சீமான் விமர்சித்த நிலையில் இன்று அடிச்சாலும் புடிச்சாலும் அண்ணன் தம்பி தான் என்பது போல் எப்போதும் சீமான் என்னுடைய சகோதரன் தான் என்று கூறினார். அவருடைய இந்த பேச்சு அரசியல் விவகாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.