தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய். இவர் இன்று தன்னுடைய அரசியல் பயணத்தினை முதல் மாநாட்டின் மூலமாக தொடங்க இருக்கிறார். கடந்த பிப்ரவரியில் புதிய அரசியல் கட்சியை தொடங்கிய அவர் வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட இருக்கிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு என்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்ற பகுதியில் நடைபெற உள்ளது. இந்த மாநாடு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடிகர் விஜய்க்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர்.

அந்த வகையில் தற்போது சினிமா பிரபலங்களும் பலர் தங்களுடைய எக்ஸ் பக்கத்தில் நடிகர் விஜய்க்கு முதல் மாநில மாநாடு ‌ வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதன்படி நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய x பக்கத்தில் முதல் மாநாடு வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதேப்போன்று நடிகர் ஜெயம் ரவியும் நடிகர் விஜயின் முதல் மாநில மாநாடு வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்துள்ள நிலையில் சிபிராஜ் நடிகர் விஜயின் பேச்சை காண்பதற்கு ஆவலாக இருப்பதாகவும் அவருடைய முதல் மாநில மாநாடு வெற்றி பெற வேண்டும் என்றும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதன் பிறகு சசிகுமார் உங்கள் வரவு ஏழை எளிய மக்களுக்கான பெரிய நம்பிக்கையாக அமையட்டும் என்று விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் தயாரிப்பாளர் அல்சராக கல்பாத்தியும் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதன் பிறகு இன்று நிலையில் செய்தல்களை சந்தித்த பிரபல நடிகை ரெஜினா சான்ட்றா நடிகர் விஜய் மிகவும் திறமையானவர் என்றும் அவருடைய முதல் மாநில மாநாடு வெற்றி பெற வேண்டும் என்றும் வாழ்த்தி உள்ளார். இதேபோன்று இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பிரபு விஜய் ஒரு சிறந்த மனிதர் அவருக்கு என்னுடைய முழு ஆதரவு எப்போதும் இருக்கும் அவருடைய மாநாடு வெற்றிபெற வேண்டும் என்று வாழ்த்தி உள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் விஜயின் புதிய பயணத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும் முன்னதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ், வெங்கட் பிரபு உள்ளிட்ட வரும் நடிகர் விஜயின் முதல் மாநில மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். அதன் பிறகு நடிகர் சூர்யாவும் நேற்று கங்குவா பட இசை வெளியீட்டு விழாவின்போது நடிகர் விஜயின் அரசியல் பயணம் வெற்றி பெறவும் அவருடைய முதல் மாநாடு வெற்றி பெறவும் வாழ்த்தினார். மேலும் நடிகர் விஜயின் முதல் மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெறும் நிலையில் தற்போது திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.