
தமிழ் திரை உலகின் பிரபல நடிகரான சத்யராஜின் மகன் சிபிராஜ். இவரும் பல படங்களில் நடித்து இவருக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் விஜயின் தீவிர ரசிகரான சிபிராஜ் அவர் கட்சி ஆரம்பித்ததற்கும் ஆதரவு தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் சில அரசியல்வாதிகள் விஜயை ஒரு கூத்தாடி என்று பேசியதால் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் முக்கிய மாற்றம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளார் சிபிராஜ். அதாவது தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தன்னை ஒரு கூத்தாடி என்று சிபிராஜ் குறிப்பிட்டுள்ளார். மேலும் சிபியின் சகோதரி திமுக கட்சியில் இணைந்ததும் சமீபத்தில் விஜயை அவர் விமர்சித்ததும் குறிப்பிடத்தக்கது.