விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் ஜனனி. இலங்கையை சேர்ந்த தொகுப்பாளரான இவர் பிக் பாஸ் மூலமாக தமிழ்நாட்டிலும் பெரிய அளவில் பிரபலமானார். தற்போது அவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. விஜய்யுடன் லியோ படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து இருந்தார். அதன் பிறகு நிழல் என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

விபத்தில் சிக்கிய யாழ் ஜனனி; ஷூட்டிங்கில் நேர்ந்த துயரம் - ஜே.வி.பி நியூஸ்

இந்த நிலையில் நிழல் படத்தின் ஷூட்டிங்கின் போது ஏற்பட்ட விபத்தில் இவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் காலில் பெரிய கட்டோடு நடக்க முடியாமல் நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்திருக்கும் வீடியோ வெளியாகி தற்போது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இதனையடுத்து இதை பார்த்த நெட்டிசன்கள் அனைவரும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.