
பாலிவுட்டில் முன்னணி நடிகையாகவும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்ட நடிகையாகவும் வளம் வருபவர் பிரியங்கா சோப்ரா. பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். மிஸ் வேர்ல்ட் பட்டம் பெற்ற இவர் தனது திரைபயணத்தை முதலில் நடிகர் விஜயுடன் தொடர்ந்தார். அதாவது கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான தமிழன் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த என்ட்ரி கொடுத்தார். பின்னர் பாலிவுட்டில் நடிக்கச் சென்றார்.
இந்த நிலையில் நடிகை பிரியங்கா சோப்ரா கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ள நிகழ்வு அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது தொடர்பாக தனது இன்ஸ்டா ஸ்டேட்டஸில் ஒரு புகைப்படத்தை அவர் பகிர்ந்து உள்ளார். அதில், எனது வேலையில் உள்ள தொழில் முறை ஆபத்து என்ற கருத்துடன், கழுத்தில் வெட்டு காயத்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் விரைவில் அவர் குணமடைய வேண்டும் என ஆறுதல் கூறி வருகிறார்கள்.