
டெல்லியில் உள்ள சாத்தாப்பூர் பகுதியில் இரண்டு நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை காளைமாடு ஒன்று துரத்தி சென்று முட்டியது.
இதனைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் போலீசார் உடனடியாக செயல்பட்டு அந்த காளை மாட்டை விரட்டி அவ்விருவரையும் காப்பாற்றினர். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரல் ஆகி உள்ளது.
https://www.instagram.com/reel/C-Ne4DFMnyP
இனிவரும் நாட்களில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.