
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த படம் பிப்ரவரி மாதம் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ஆரவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தணிக்கை குழு விடாமுயற்சி படத்திற்கு U/A சான்றிதழை வழங்கியுள்ளது என்று பட குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.