நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சிறப்பு பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் சஞ்சய் ராம் என்பவர் 12-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் சஞ்சய் ராம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் இருக்கும் விடுதியில் தங்கி தினமும் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று விட்டு சக மாணவர்களுடன் சஞ்சய் ராம் விடுதிக்கு திரும்பினார்.

அப்போது திடீரென சஞ்சய் ராம் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் சஞ்சய் ராமை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சஞ்சய் ராம் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.