விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே பாக்கிய ஈஸ்வரன் (49)-வசந்தலட்சுமி (42) தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் பாக்கிய ஈஸ்வரன் பஞ்சு ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இவர்கள் கடந்த 6-ம் தேதி திருச்செந்தூருக்கு சென்ற நிலையில் அங்கு ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இவர்கள் நேற்று முன் தினம் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் அறைக்கு வந்துள்ளனர்.

அதன் பிறகு நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் அறை திறக்காததால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அப்போது கணவன் மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது தொடர்பாக திருச்செந்தூர் தாலுகா காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று இருவரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் கடன் தொல்லை காரணமாக இருவரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.