
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருக்கு பபிஷா என்ற மகள் இருந்துள்ளார். இவர் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் தங்கி முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் விடுதியின் 4-வது மாடியில் இருந்து திடீரென குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். உடனடியாக அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த நிலையில் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
இருப்பினும் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக சரவணம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து அவர்கள் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் காதல் தோல்வியால் பபிஷா தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.