
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் 1.13 கோடி மகளிர் மாதந்தோறும் ரூ.1000 வருகிறார்கள். இந்நிலையில் இந்த திட்டத்தில் பல்வேறு காரணங்களால் விடுபட்ட 1.48 லட்சம் மகளிருக்கு ஜூலை 15 ஆம் தேதி முதல் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
வங்கி கணக்கில் பணம் செல்வதை உறுதி செய்வதற்கு நாளை 1 ரூபாய் அனுப்பி சோதனை செய்யப்பட இருக்கிறது. மேலும் புதிய பயனாளிகளுக்கு விண்ணப்பம் செய்வதற்கு இன்னும் 30 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.