திருச்சூர் மாவட்டம் கொரட்டிக் கட்டில் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணு(32). இவரது தம்பி கிருஷ்ணன்(29). சம்பவம் நடைபெற்ற அன்று அண்ணன் தம்பி இருவரும் திருச்சூர் ஆனந்தபுரத்தில் இருக்கும் கள்ளு கடையில் கள் குடித்த பிறகு மதுபோதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதில் வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். அப்போது விஷ்ணு பயங்கர ஆயுதத்தால் கிருஷ்ணனின் தலையில் ஓங்கி அடித்தார். இதனால் படுகாயமடைந்த கிருஷ்ணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விஷ்ணுவை கைது செய்தனர். அண்ணன் தம்பிக்கு இடையே ஏற்கனவே சொத்து பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.