உலக அளவில் அதிகரிக்கும் செயற்கைக்கோள் மற்றும் விண்கல குப்பைகளால் எதிர்காலத்தில் விண்வெளியில் நெரிசல் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 1957 முதல் இன்று வரை சுமார் 8000 செயற்கை கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதில் தற்போது 3000 செயற்கைக்கோள்கள் தான் இயங்குகின்றன. மீதம் உள்ள செயல்படாத செயற்கைக்கோள்கள் குப்பைகளாக ஏறத்தாழ 9 ஆயிரம் மெட்ரிக் டன் விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கிறது. இதனால் விண்வெளியில் நெரிசல் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.