
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகளை நிறுவும் இடத்தில் மாற்று மதத்தினர் புண்படும் வகையில் கோஷங்களை எழுப்பக் கூடாது என்றும் சிலைகள் அமைக்கப்பட்டுள்ள இடங்களில் கூடுதல் கண்காணிப்புடன் பணிகளில் ஈடுபட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் அன்று பூஜைக்காக வைக்கப்படும் விநாயகர் சிலைகள் ஒரு வாரத்திற்கு பிறகு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட கடலில் கரைக்கப்படும். இதனால் தமிழகம் முழுவதும் உழவு பிரிவு போலீசார் உஷாராகி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மேலும் தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.