பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கலந்து கொண்டார். இவர் 50 கிலோ எடை பிரிவில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய நிலையில் 100 கிராம் எடை அதிகமாக இருப்பதாக கூறி கடைசி நேரத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவர் நீதிமன்றத்தில் தனக்கு வெள்ளி பதக்கம் வேண்டும் என்று மனு கொடுத்தார். ஆனால் அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இது தொடர்பாக தற்போது அவரின் பயிற்சியாளர் வோல்ர் அகோஸ் பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, அரை இறுதி போட்டி முடிவடைந்த பிறகு வினேஷ் போகத் கூடுதலாக 2.7 கிலோ எடை இருந்தார். இதனால் அவர் சுமார் 1 மணி நேரம் 50 நிமிடங்கள் வரை கடுமையாக உடற்பயிற்சி செய்தார். அவர் நள்ளிரவு முதல் அதிகாலை 5.30 மணி அளவில் தீவிரமாக உடற்பயிற்சி செய்தார். ஆனால் அவர் உடம்பிலிருந்து ஒரு சொட்டு வியர்வை கூட வரவில்லை. இதில் அவர் ஒரு நிமிட இடைவெளி மட்டுமே எடுத்துக்கொண்டு அடுத்தடுத்து உடற்பயிற்சி செய்தார். அவர் கடுமையான முறையில் உடற்பயிற்சி செய்ததை என்னால் வார்த்தைகளால் இங்கு விவரிக்க முடியவில்லை. ஆனால் அவர் அப்படி செய்யும்போது இறந்து விடுவாரோ என்று அஞ்சினேன் என்று கூறியுள்ளார்.