
மும்பையில் உள்ள காட்கோபரில் லட்சுமி நகர் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு எமிரேட்ஸ் விமானம் ஒன்று பறவைகள் மீது விழுந்து சேதம் அடைந்தது. இருப்பினும் மும்பை ஏர்போர்ட்டில் விமான பாதுகாப்பாக தரையிறங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது விமானத்தின் மீது திடீரென அரிய வகை பிளமிங்கோ பறவைகள் மோதியது.
இதனால் விமானம் சேதமடைந்ததோடு ஏராளமான பறவைகளும் பரிதாபமாக இறந்தது. இது தொடர்பாக விமானத்துறை அதிகாரிகள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது 36 பிளமிங்கோ பறவைகள் இறந்து கிடந்தது. மேலும் இந்த சம்பவம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.