டேவிட் வார்னர் கடந்த 15 வருடங்களாகவே ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடி வருகிறார்.கடந்த 2024 ஆம் வருடம்  டி20 உலக கோப்பையோடு அனைத்து வடிவிலான சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனை அடுத்து அவர் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் நடிகராக அறிமுகம் ஆக உள்ளதாக கூறி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். அதாவது ராபின்ஹூட் என்ற படத்தில் முக்கிய இடத்தில் இவர் நடித்துள்ளார்.

இந்த படம் வரும் 28ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படத்தில் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக டேவிட் வார்னர் இன்று அதிகாலை ஹைதராபாத் வந்தடைந்தார். இதனையடுத்து நேற்று இரவு தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார் . அதில்,  “விமானியே இல்லாத ஏர் இந்தியா விமானத்தில் மணி கணக்கில் காக்க வைக்கப்பட்டிருந்தோம். விமானி இல்லை என்று தெரிந்தும் ஏன் பயணிகளை உள்ளே ஏற விடுகிறீர்கள்” என்று பதிவிட்டு இருந்தார். இதனையடுத்து வானிலை காரணமாக விமானம் தாமதமாக புறப்பட்டதாக ஏர் இந்தியா விளக்கம் அளித்துள்ளது.