
கனடா நாட்டின் டொரன்டோ விமான நிலையத்தில் இருந்து 389 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் கனடா போயிங் விமானத்தின் என்ஜினில் தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கனடா நாட்டில் டொரன்டோ விமான நிலையத்திலிருந்து பாரிஸ் நோக்கி 389 பயணிகளுடன் ஏர் கனடா போயிங் விமானம் புறப்பட்டது. இந்த நிலையில் புறப்பட்ட சில நிமிடத்தில் விமானத்தின் எஞ்சின் பகுதியில் தீப்பிடித்தது.
இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தார். அடுத்த சில நொடிகளில் விமானம் அவசர அவசரமாக தரை இறக்கப்பட்டது. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.