ஏர் இந்தியா நிறுவனம் விமான பயணிகளுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் அந்நிறுவனம் கூறியதாவது, முன்பு விமானத்தில் பயணிக்கும் பயணிகள் 30 கிலோ எடை கொண்ட லக்கேஜை  கொண்டு செல்ல அனுமதித்தது. ஆனால் தற்போது அந்த எடையின் அளவை குறைத்துள்ளது.

அதாவது இனி வரும் நாட்களில் 20 கிலோ எடை கொண்ட லக்கேஜை மட்டுமே கொண்டு செல்ல அனுமதிப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. அதனால் விமான பயணிகள் பயணம் செய்வதற்கு முன்பு, லக்கேஜின் எடை அளவை சோதனை செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னரே விமானத்தில் பயணிக்க முடியும் என்று  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவுறுத்தியுள்ளது.