இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் என்னால் சரியாக விளையாட முடியாமல் போனது இப்போது வரை வருத்தம் அளிக்கிறது. அதனை சரி செய்ய இன்னொரு முறை வாய்ப்பு கிடைக்குமா என தெரியவில்லை. அது நடக்க இன்னும் நாலு வருடங்கள் ஆகும். எனவே வாழ்க்கையில் என்ன நடந்ததோ அதை நீங்கள் அமைதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இதனால் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இல்லையென்றால் அவர் இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே தான் டெஸ்ட் போட்டிகளில் ஆடுவேன் என்பதை இப்படி சுட்டிக்காட்டி இருக்கிறாரா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளது. இந்த பேட்டியால் விராட் கோலியின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.