நேற்று துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதலாவது அரைஇறுதியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதியது. இதில் இந்திய அணி 48. 1 ஓவர்களில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 267 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலமாக இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இந்த நிலையில் விராட் கோலியுடனான உரையாடல் குறித்து கே.எல் ராகுல் பேசிள்ளார். அதாவது, “நான் மைதானத்திற்குள் நுழைந்த போது நீங்கள் இறுதி வரை இருக்க வேண்டும். எல்லாம் ஓவர்களிலும் நான் ரிஸ்க் எடுக்கிறேன். நிதானமாக விளையாடுங்கள். அணிக்கு நீங்கள் தேவை என விராட் கோலியிடம் கூறினேன். அதை உணர்ந்து அவர் சிறப்பாக செயல்பட்டார் “என்று கூறியுள்ளார்.