விருச்சிகம் ராசி அன்பர்களே,
இன்று மிகவும் நேர்மையாக செயல்படுவீர்கள். காரியங்களை அற்புதமாக செய்து முடித்து பாராட்டுகளை பெறுவீர்கள். தனவரவு சீராக வந்து கொண்டிருக்கும். நேர்மையாக நடந்து கொள்ள முடியும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். பொறுப்பாக இருக்க பாருங்கள். பயணங்கள் செல்ல போட்ட திட்டம் வெற்றியைக் கொடுக்கும். எல்லோர் மனதிலும் நல்ல பெயரை எடுப்பீர்கள்.
வருமானம் கருதி சேமிப்பை உயர்த்துவீர்கள். திருமண பேச்சுகள் நல்ல முடிவை கொடுக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு இடமாற்றம் போன்றவை கிடைக்கும். இன்று பெண்களுக்கு மன அழுத்தம் விலகும். காரியங்கள் கைக்கூடும். வீடு மற்றம் மகிழ்ச்சியை கொடுக்கும். தாய் வீட்டு சீதனத்தை கேட்டு பெறுவீர்கள்.
மாணவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள். கல்விக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள். யோசித்து எதிலும் ஈடுபட வேண்டும். தந்தையிடம் வாக்குவாதம் வேண்டாம். இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக வைத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்: இரண்டு மூன்று மற்றும் ஐந்து
அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்