விருச்சிகம் ராசி அன்பர்களே,

இன்று மாற்றங்கள் ஏற்றங்கள் கண்டிப்பாக வரக்கூடும். ஆலய வழிபாட்டில் ஆர்வம் காட்டும் நாளாக இருக்கும். அதிகாலையே நல்ல தகவல் வந்து சேரும். வெளியுலக தொடர்பு விரிவடையும். முக்கிய முடிவுகளை சிந்தித்து எடுப்பது நல்லது. தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். நினைத்த காரியத்தில் ஏற்பட்ட தடை தாமதம் விலகும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் ஏற்படும். மனதில் உற்சாகம் கூடும். புதிய ஆர்டர்கள் பிடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். மனக்குழப்பங்கள் விலகி நிம்மதியுடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் எடுக்கும் முயற்சிகள் வெற்றியைக் கொடுக்கும். திடீர் பயணங்கள் உண்டாகலாம். பெண்கள் இன்று இல்லத்தில் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். பெண்களுக்கு இந்த நாள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் நாள் என்று சொல்லலாம்.

மனதில் ஒரு விதமான நிம்மதி ஏற்படும். ஆசைப்பட்ட பொருளை வாங்கி மகிழ்வீர்கள். இன்று மாணவர்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். கலை துறையில் மிகுந்த ஆர்வம் இருக்கும். இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: ஆறு மற்றும் ஏழு

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை நிறம்