விருச்சிக ராசி அன்பர்களே,
இந்த நாள் செயல் நிறைவேற தாமதம் கொஞ்சம் ஏற்படலாம். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கக்கூடும். கூடுதல் நேரம் பணிபுரிய வேண்டிய சூழல் இருக்கும். நகைகளை இரவல் கொடுக்கல் வாங்கல் வேண்டாம். எந்த ஒரு விஷயத்திலும் ஞாபக மறதி கொஞ்சம் ஏற்படும். பார்த்துக் கொள்ளுங்கள். முன்னேற்றமான வாழ்க்கை கண்டிப்பாக அமையும். இரு தரப்பு வாதங்களையும் கேட்டு அதன் பிறகு நியாயத்தை சொல்வது நல்லது.
இன்று எதிர்ப்புகள் நீங்கிவிடும். உடல் ஆரோக்கியம் சீராகும். பணவரவு எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும். சூழ்நிலையை நீங்கள் சரியாக புரிந்து கொண்டு செயல்பட மனதை ஒருநிலை படுத்த வேண்டும். பெண்கள் கருத்துக்களை பரிமாறும் போது கவனமாக இருங்கள். செய்யும் வேலைகளை நிதானமாக செய்யுங்கள். சில பணிகள் உங்களுக்கு தொந்தரவை கொடுக்கலாம். பொறுமையாக இருந்து சாதிப்பது நல்லது.
இன்று மாணவர்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்வீர்கள். கல்வி மீது முழு அக்கறை கொள்வீர்கள். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : ஐந்து மற்றும் ஒன்பது
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்