
நாடு முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டிலும் வாக்குகளை எண்ணும் பணி மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகை ராதிகா சரத்குமார் பின்னடைவை சந்தித்துள்ளார்.
தபால் வாக்குகளை தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது. இதில், ராதிகா மற்றும் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட விஜய பிரபாகரன் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் முன்னிலையில் உள்ளார்.