
சத்தீஸ்கர் மாநில பாஜக தலைவர் தீரஜ் சிங் தேவின் ஆறு வயது மகன் செவ்வாய்க்கிழமை இரவு அம்பிகாபூரில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவே சிறுவன் அமர்ந்து ஏதோ செய்து கொண்டிருந்த சமயம் அங்கு வந்த எஸ்யூவி கார் ஒன்று சிறுவனின் மீது ஏறி சென்றது.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் மற்றும் சிறுவனின் குடும்பத்தார் கார் ஓட்டுநரை பிடித்து சரமாரியாக தாக்கினர். விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது காரை ஏற்றி கொலை செய்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் சமூக வலைதளத்தில் வெளியாகி பார்ப்போரை பதறச் செய்துள்ளது.
https://x.com/HateDetectors/status/1847208529108914595