
கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம் மேல்கோட்டை டவுனில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. அப்பள்ளியில் படித்து முடித்த முன்னாள் மாணவர் யோகி(25). இவர் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு ஓவியம் மற்றும் விளையாட்டு பயிற்சி கொடுப்பவராக இருந்துள்ளார்.
இந்நிலையில் விளையாட்டு பயிற்சி கொடுக்கும் போது மாணவிகளிடம் தவறாக நடந்துள்ளார். மேலும், அவர்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டியநிலையில் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட 4 மாணவிகள் தங்களது பெற்றோரிடம் கூறினார். இதனையடுத்து பதட்டமடைந்த பெற்றோர் மேல்கோட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இவர்கள் அளித்த புகாரின் பேரில் யோகி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.