
ஒவ்வொரு நாளும் இணையத்தில் ஒவ்வொரு விதமான விடியோக்கள் வெளியாகி வருகின்றது. அந்தவகையில் குஜராத்தில் உள்ள கர்படா தாலுக்கா ஜரிபுஜார்க் கிராமத்தில் சமீபத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்துள்ளது. ஒரு வீட்டில் நாகப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்பத்து வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக அனைத்து விலங்குகள் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து குழு உறுப்பினர்கள் பாம்பை வெளியே கொண்டு வந்தனர். அந்த பாம்பு ஏற்கனவே கோழியைக் கொன்று 8 முட்டைகளை விழுங்கிவிட்டது. இதனை அடுத்து பாம்பு அனைத்து முட்டைகளையும் ஒவ்வொன்றாக கக்கியது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.