இந்தியாவில் விவசாயிகளுக்காக மத்திய அரசு சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி விவசாயிகளின் நலனுக்காக கிஷான் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வரும் நிலையில் இந்த திட்டத்தில் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ள அனைத்து இந்திய விவசாயிகளும் இந்த திட்டத்தின் பயனாளிகள் ஆகும். தகுதியுடைய விவசாயிகளுக்கு மட்டும் அரசிடமிருந்து ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

விவசாயிகளின் வங்கி கணக்கில் மூன்று வெவ்வேறு தவணைகளில் இந்த பணம் வரவு வைக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் 17வது தவணை உதவித்தொகை மத்திய அரசு ஜூன் 18-ஆம் தேதி நாளை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்துகின்றது. அதன்படி 9.26 கோடி விவசாயிகளின் கணக்கில் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தப்பட உள்ளது. பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் நிலையில் இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.