பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். டார்லிங், பென்சில் உள்ளிட்ட இவர் நடித்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இதனிடையே ஜி.வி பிரகாஷ் சிறு வயதில் இருந்து காதலித்து வந்த பாடகி சைந்தவியை கடந்த 2013 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் சமீபத்தில் இருவரும் விவகாரம் பெற்று பிரிய போவதாக அறிவித்தார்கள்.

இந்த நிலையில் தற்போது மனைவியை பிரிந்து வாழும் ஜிவி பிரகாஷ் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியாகி உள்ளது .அந்த வகையில் இவருடைய சொத்து மதிப்பு 75 கோடி பெறுமதியாக இருப்பதாக கூறப்படுகிறது. பார்ப்பதற்கு எளிமையாக இருக்கக்கூடிய இவர் உதவி செய்வதற்காக ஒரு சமூக வலைதளமே வைத்திருக்கிறார். இதில் உள்ள பாதி சொத்துக்கள் அவர் இசையமைப்பாளராக இருந்து சம்பாதித்தது என்று கூறப்படுகிறது.