
மதுரை மாவட்டத்தில் பென்னி குவிக்கின் முல்லைப் பெரியாறு அணையின் வரலாற்று நிகழ்வுகள் என்னும் தலைப்பில் நீரதிகாரம் என்ற புத்தகம் பற்றிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். சுரேஷ்குமார் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இன்றைய காலத்தில் தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் சோம்பேறியாக வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் பாதி சம்பளத்தை கொடுத்து இளைஞர்கள் குடிகாரர்களாக மாறி வருகிறார்கள். அதிலும் சிலர் மலிவு விலையில் அவை கிடைக்கிறதா என்று தான் பார்க்கிறார்கள். அப்படி தேடிச் சென்ற ஒரு கூட்டம் தான் இன்று கள்ளக்குறிச்சியில் மாண்டு விட்டனர். இதற்கு ரூ.10 லட்சம் கொடுத்து தீய முன்னுதாரணத்தை தமிழ் மண்ணில் உருவாக்கியுள்ளதை நீங்கள் உணர வேண்டும். மேலும் இளைஞர்களின் நல்வழிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறினார்.