கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் குடித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சியில் 26 பேரும், சேலத்தில் 9 பேரும், புதுச்சேரியில் 3 பேரும், விழுப்புரத்தில் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், விஷச் சாராயம் குடித்து உயிரிழந்த 20 பேரின் உடல்களை கருணாபுரத்தில் வைத்து ஒரே இடத்தில் தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.