சாதாரண மக்களுடைய அதிகபட்ச கனவு என்பது சொந்த வீடு மற்றும் நிலம் வாங்குவது தான். ஆனால் அவர்களுக்கு ஏற்படும் பொருளாதார நெருக்கடியின் காரணமாகவே சொந்த வீடு வாங்குவதும், நிலம் வாங்குவதும் நடக்காமலேயே போய் விடுகிறது. அவர்களின் அந்த கனவு தவிடுபொடி ஆகிவிடுகிறது. ஆனால் நாம் இப்படி கஷ்டப்பட்ட வாங்கும் ஒரு வீட்டை வாங்கும் பொழுது அல்லது அதை விற்கும் போது அரசாங்கம் லட்சக்கணக்கான ரூபாயை வரியாக ஏன் வசூலிக்கிறது? என்று பலருக்கும் சந்தேகம் எழுந்து வரலாம்.

அதாவது பொதுமக்கள் தங்களுடைய சொத்துக்களை விற்கும்போதோ அல்லது வாங்கும்போதோ அதில் கிடைக்கும் லாபத்திற்கு வரி செலுத்துவது கட்டாயமானதாகும். எத்தனை முறை வீடு மற்றும் நிலம் வாங்கினாலும் அதை விற்றாலும் வரி செலுத்தி ஆக வேண்டும். இந்த வகையான வரிகள் அனைத்தும் அரசாங்கத்தின் வருவாய்க்கு செல்கிறது. மத்திய மற்றும் மாநில அரசுக்கு வழங்கப்படும் இந்த வரியானது அரசாங்கத்தால்  பொது மேம்பாட்டு பணிகளுக்கு வழங்கப்படுகிறது.